ஷா ஆலம், டிச 7- தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் இயந்திரங்களை வழங்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
வழங்கப்படும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அரசினால் வழங்கப்படும் படகுகள் மற்றும் இயந்திரங்கள் மூன்றாம் தரப்பினரிடம் விற்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
அரசு வழங்கும் இத்தகைய வாய்ப்புகளை மீனவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. கடந்த காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் காரணமாக படகுகள் மற்றும் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தை நீண்ட நாட்களாக மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்திருந்தோம் என்றார் அவர்.
மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு படகு மற்றும் இயந்திரம் அவசியமாகத் தேவைப்படும் மூன்று மீனவர்களுக்கு முதல் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்கவிருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சுங்கை பூரோங் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.
இந்த உதவித் திட்டத்தை இதர மீனவர்களுக்கும் விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
மீனவர்களுக்கு படகுகள் வழங்க சிலாங்கூர் அரசு பரிசீலனை
7 டிசம்பர் 2020, 3:02 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
சடலம் கண்டெடுக்கப்பட்டது ! காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணியா?
n.pakiya
1 அக்டோபர் 2023

national
அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS); 7 முக்கிய அம்சங்களுடன் ஏற்பாடு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

national
மலேசியாவில் பொருளாதார நெருக்கடியால் தள்ளிப்போகும் இளைஞர்களின் திருமணம்
Shalini Rajamogun
9 ஜூலை 2026

வகைevent
உங்கள் கருத்து என்ன?



