SELANGOR

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் !!!

13 ஜூலை 2020, 8:09 AM
மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் !!!

ஷா ஆலம், ஜூலை 13:

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் எங் சுவி லிம் கூறினார்.

" மக்கள் பிரதிநிதிகள் பேசும் நேரத்தை கண்டிப்பாக குறைக்க மாட்டோம். கடந்த ஒரு மாத காலமாக பெரிய அளவில் செலவு செய்து சட்டமன்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயப்பட வேண்டாம். உங்களது சட்டமன்றத் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தாராளமாக சட்டசபையில் பேசலாம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் கோவிட்-19 தொற்று நோய் பரவலை தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டுமே சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த முறை 678 பணியாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.