SELANGOR

கோவிட்-19:சிலாங்கூர் இரண்டு புதிய சம்பவங்களை பதிவு செய்துள்ளது

29 ஜூன் 2020, 1:32 PM
கோவிட்-19:சிலாங்கூர் இரண்டு புதிய சம்பவங்களை பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், ஜூன் 29:

சிலாங்கூர் மாநிலத்தில் திங்கட்கிழமையன்று இரண்டு சம்பவங்கள் கோவிட்-19 தொற்று நோய் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. எஸ்திஎப்சியின் தகவலின் அடிப்படையில் ஒரு சம்பவம் பிஜி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு திரும்பியவர் என்று அது மேலும் தெரிவித்தது.

இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 2,046 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் ஆகும். இதில் 31 நோயாளிகள் இன்னும் முழுமையாக காயமடையவில்லை என்றும் எஸ்திஎப்சி கூறியிருக்கிறது. இதனிடையே பொது மக்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று நினைவூட்டியது. மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி ) காலகட்டத்தில் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எஸ்திஎப்சி தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.