SELANGOR

மதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்- குணராஜ் பரிந்துரை

3 ஜூன் 2020, 1:57 AM
மதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்- குணராஜ் பரிந்துரை

ஷா ஆலம், ஜூன் 3:

ஊராட்சி மன்றங்கள் மதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே திறந்து இருக்க புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என செந்தோசா சட்ட மன்ற குணராஜ் ஜோர்ஜ் வேண்டுகோள் விடுத்தார். இதன் வழி 21 வயதுக்கு உட்பட்ட இளையோர்கள் மதுபானங்களை வாங்குவதை தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

" இந்த மதுபானங்களை குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப் படுகிறது. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த வளாகத்திற்கு நுழைய அனுமதிக்கக் கூடாது. கடந்த 2009-இல் நான் செலாயாங் நகராண்மை கழக உறுப்பினராக இருந்த போது இதே பரிந்துரையை அரசாங்கத்திடம் வைத்தேன். ஆனாலும், வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கருத்தில் கொண்டு எனது பரிந்துரை நிராகரிக்கப்பட்டது," என குணராஜ் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.