SELANGOR

கிள்ளானில் பிகேபி ஆணையை மீறிய 23 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

20 ஏப்ரல் 2020, 3:21 AM
கிள்ளானில் பிகேபி ஆணையை மீறிய  23 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஷா ஆலம், ஏப்.20-

3ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக கிள்ளான், தாமான் செந்தோசாவைச் சேர்ந்த 23 பேர் இன்று காலை தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கிள்ளான் செலாத்தான் குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் போலீஸ் படைத் தலைவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைவரும் தாமான் செந்தோசா சுற்று வட்டாரப் பகுதியில் இன்று காலை தடுத்து வைக்கப்பட்டனர். மூன்றாம் கட்ட பிகேபி அமலில் இருக்கும் போது அந்நேரத்தில் அங்கு அவர்கள் இருந்ததற்காக கூறிய காரணங்கள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லை என்று அந்த அறிக்கை கூறியது. தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கிள்ளான் செலாத்தான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.