SELANGOR

மந்திரி பெசார்: 7% மக்கள் இன்னும் பிகேபியை பின்பற்றவில்லை; 800 நபர்கள் மீது வழக்குப் பதிவு !!!

11 ஏப்ரல் 2020, 6:32 AM
மந்திரி பெசார்: 7% மக்கள் இன்னும் பிகேபியை பின்பற்றவில்லை; 800 நபர்கள் மீது வழக்குப் பதிவு !!!

உலு கிள்ளான், ஏப்ரல் 11:

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் 7% பொது மக்கள் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருந்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் காவல்துறை நேற்று தம்மிடம் கொடுத்த அறிக்கையின் படி 93% மாநில மக்கள் பிகேபி நடைமுறைகளை பின்பற்றி நடக்கிறார்கள் என்றும் 800 நபர்கள் மதிக்காமல் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

" கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த நேரத்தில் பொது மக்கள் நோய் சங்கிலி தொடரை நிறுத்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்," என்று லெம்பா கெராமாட் எம்பிஏஜே பல்நோக்கு மண்டபத்தில் உலு கிள்ளான் சட்ட மன்ற தொகுதியின் உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.