SELANGOR

ரமலான் சந்தை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஆட்சிக் குழு உறுப்பினர்

30 மார்ச் 2020, 4:54 AM
ரமலான் சந்தை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலம், மார்ச் 30-

மாநிலத்தின் ரமலான் சந்தை ஏற்பாடுகளைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பது குறித்து சிலாங்கூர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஊராட்சி துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். வர்த்தகர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் உட்பட பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

இவ்வாண்டு ரமலான் சந்தை நடத்துவது குறித்து ஊராட்சி மன்றத்தின் உரிமம் வழங்கும் பிரிவின் இயக்குநருடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது குறித்து மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் அறிவிப்பார் என்று சிலாங்கூர் கினியிடம் இங் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.