SELANGOR

ஐ ரன் புக்கிட் மலாவத்தி நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

19 மார்ச் 2020, 4:19 AM
ஐ ரன் புக்கிட் மலாவத்தி நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

ஷா ஆலம், மார்ச் 20:

கோல சிலாங்கூர், மலாவத்தி சதுக்கத்தில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த புக்கிட் மலாவத்தி ஐ-ரன் நிகழ்ச்சி பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கோவிட்-19 வைரஸ் பரவல் கடுமையாக இருப்பதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஐ ரன் மலேசியா அறிவித்தது.

இதனை அடுத்த, இந்நிகழ்ச்சிக்கு முன் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்களிடம் ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியதோது இந்நிகழ்ச்சியை புதிய தேதியில் பங்கேற்ற இயலாதவர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்டணத்தைத் திரும்ப ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

“எந்த ஒரு சூழ்நிலையிலும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடப்பாடு கொண்டுள்ளோம்” என்று அறிக்கை ஒன்றில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.