SELANGOR

அணைக்கட்டுகளில் தண்ணீர் அளவு சீராக உள்ளன!

27 ஜனவரி 2020, 3:46 AM
அணைக்கட்டுகளில் தண்ணீர் அளவு சீராக உள்ளன!

ஷா ஆலம், ஜன.27-

திங்கட்கிழமை காலை 8 மணி வரையில் சிலாங்கூரில் உள்ள சில அணைக்கட்டுகளில் நீரின் அளவு நன்றாக இருந்ததாக சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் ( லுவாஸ்) கூறியது. சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டில் 98.67 விழுக்காடு அல்லது 226.95 கன மீட்டர் தண்ணீரும் லாங்காட்டில் 99.83 விழுக்காடு அல்லது 34.04 கன மீட்டர் தண்ணீர் இருந்ததாக இவ்வாரியத்தின் அகப்பக்கம் விவரப்பட்டியல் தெரிவித்தது.

இதனிடையே, செமினி அணைக்கட்டில் 99.58 விழுக்காடு அல்லது 58.82 கன மீட்டர் தண்ணீர் மற்றும் கிள்ளான் கேட்ஸ் அணைக்கட்டில் 96.05 விழுக்காடு அல்லது 24.33 கன மீட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பட்டியல் வழி தெரிய வந்துள்ளது.

தாசேக் சுபாங் அணைக்கட்டில் 100 விழுக்காடு மல்லது 4.21 கன மீட்டர் தண்ணீர் மற்றும் சுங்கை லாபு அணைக்கட்டில் 99.62 விழுக்காடு அல்லது 9.26 கன மீட்டர் தண்ணீர் பதிவாகியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.