SELANGOR

பெட்டாலிங் மாவட்ட அதிகாரியாக ஜோஹாரி அனுவார் நியமனம்!

3 ஜனவரி 2020, 2:06 AM
பெட்டாலிங் மாவட்ட அதிகாரியாக ஜோஹாரி அனுவார் நியமனம்!

ஷா ஆலம், ஜன.3-

பெட்டாலிங் மாவட்ட அதிகாரியாக ஜோஹாரி அனுவாரை மாநில அரசாங்கம் நியமித்தது. இவரது நியமனம் நேற்று முதல் நடப்புக்கு வந்தது. மாநில அரசு செயலகத்தில் மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ முகமது அமின் அஹ்யா தனது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோஹாரியிடம் பதவி உறுதி மொழி மற்றும் நியமனக் கடிதங்களை வழங்கினார்.

2015ஆம் ஆண்டு முதல் பெட்டாலிங் ஜெயா துணை டத்தோ பண்டாராக பதவி வகித்து வந்த ஜோஹாரி, பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழக நகர்ப்புற நிர்வாக அறிவியல் துறை பட்டதாரியாவார்.

அதோடு, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் டிப்ளோமாவும் அதே பல்கலைக்கழகத்தில் நடவடிக்கை நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இது தவிர்த்து, 2002ஆம் ஆண்டில் மியுசிக் காய்ஸ் & எக்செலெண்ட் குழுவில் இடம்பெற்றிருந்தார். மேலும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் சியாஷ் இசைக் குழுவில் முதன்மை கிட்டார் கலைஞராகவும் இவர் வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.