SELANGOR

யுனிசெல்லில் நடைபெறும் '360 விவேக சிலாங்கூர்' பயணத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும்

22 நவம்பர் 2019, 3:34 AM
யுனிசெல்லில் நடைபெறும் '360 விவேக சிலாங்கூர்' பயணத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும்

ஷா ஆலம், நவம்பர் 22:

பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள சிலாங்கூர் பல்கலைக் கழகத்தில் (யுனிசெல்) '360 விவேக சிலாங்கூர்' சூறாவளி பயணம் என்ற நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என யுனிசெல்லின் தொழில்முறை தொடர்பு இயக்குனர் ஹாஸ்ரில் அபு ஹாசான் கூறினார்.

இந்த ஆண்டின் கடைசி சூறாவளி பயணமாக இது அமையும் என்றும் யுனிசெல்லின் 19-ஆம் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு நவம்பர் 28 தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என அவர் தெரிவித்தார். மந்திரி பெசார் பெறுநிறுவனமும் (எம்பிஐ) சிலாங்கூர் பல்கலைக் கழகமும் மற்றும் சிலாங்கூர் பொது நூலக கழகம் ஆகியவை  இணைந்து இந்த சூறாவளி பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது என்று மேலும் அவர் விவரித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.