SELANGOR

யுனிசெல் விளையாட்டு கட்டடம் திறக்கப்பட்டது

13 ஆகஸ்ட் 2019, 7:38 AM
யுனிசெல் விளையாட்டு கட்டடம் திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஆக.13-

தரம் உயர்த்தப்பட்ட சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) விளையாட்டு கட்டடம் அதன் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. “மேம்படுத்தப்பட்டுள்ள வசதிகளால் இந்த கட்டடத்தின் அனைத்து விளையாட்டு துறை வசதிகளின் தோற்றம் உயர்த்தப்பட்டுள்ளதாக” இதன் தலைவரும் இணை வேந்தருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து விளையாட்டு வசதிகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதோடு இவற்றை பேணிக் காக்கவும் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மேலும், இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கு இது துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.