SELANGOR

உலு சிலாங்கூர் ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படவில்லை

5 ஆகஸ்ட் 2019, 5:11 AM
உலு சிலாங்கூர் ஆற்றில்  தூய்மைக்கேடு ஏற்படவில்லை

ஷா ஆலம், ஆக.5-

ரந்தாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ஆற்றோரத்தில் காணப்பட்ட திரவம் அடைக்கப்பட்ட 112 தோம்புகளில் இருந்து நீர் கசிந்து ஆற்றுக்குள் செல்லவில்லை என்பதை மாநில அரசு உறுதிப்படுத்தியது.

இவ்விவகாரம் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இந்த நீர் தோம்புகள் அருகில் உள்ள காய்கறி தோட்டக்காரர் ஒருவருக்குச் சொந்தமானவை என்று தெரிய வந்துள்ளதாக சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளஸ்ரீ விவகாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக வாரியமான லுவாஸ் சம்பந்தப்பட்ட பகுதியில் உட்பிரவேசிக்கத் தடை விதித்தது.

தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை அமைந்திருக்கும் பகுதி அருகே உள்ள ஜாங் ஆற்றில் சம்பந்தப்பட்ட 112 தோம்புகளில் இருந்து திரவம் கசியவில்லை என்பது விசாரணை வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.