SELANGOR

புறநகர் மேம்பாட்டை உறுதிசெய்ய வெ. 6 மில்லியன் ஒதுக்கீடு

31 ஜூலை 2019, 5:06 AM
புறநகர் மேம்பாட்டை உறுதிசெய்ய வெ. 6 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 31-

புறநகர் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதற்காக 6 மில்லியன் வெள்ளியை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. புறநகர்களில் உ:ள்ள பல்நோக்கு மண்டபம், பொது மண்டபம் போன்றவற்றை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்று தொழில்முனைவர் மேம்பாடு, புறநகர் மேம்பாட்டு மற்றும் கிராம கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார்.

புறநகர் மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ஆண்டுதோறும் தொடரப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாட்டை மாநில அரசாங்கம் கொண்டுள்ளது என்றார் அவர்.

அதே வேளையில், இதன் அமலாக்கம் குறித்து சட்டமன்ற உறுப்பினர், கிராம தலைவர் அல்லது பொது மக்கள் என அனைத்து தரப்பினரும், மாநில அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக பாலமாகத் திகழும் மாவட்ட நில அலுவலகத்திடம் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.