SELANGOR

ரவாங்கில் தீவிர வெள்ளத் தடுப்பு நடவடிக்கை

31 ஜூலை 2019, 4:38 AM
ரவாங்கில் தீவிர வெள்ளத் தடுப்பு நடவடிக்கை

ரவாங், ஜூலை 31-

வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு ரவாங் தொழிற்பேட்டைப் பகுதியில் வெள்ளத் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்தார்.

ஜூலை 22ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளமே சமூக வலைத்தளங்களில் ஆகக் கடைசியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவமாக இருக்கும் என்று சுவா குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பு நாம் திடீர் வெள்ளப் பிரச்னையை அடிக்கடி எதிர்நோக்கி வந்துள்ளோம் என்பது உண்மையே. ஆனால், இது முனு போல அவ்வளவு கடுமையானதாக இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“பொதுப்பணி இலாகா ரவாங் தொழிற்பேட்டைப் பகுதியில் சாலை விர்வாக்கப் பணி மற்றும் சுங்கை கோங்கின் தரத்தை உயர்த்தும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் யாவும் 2021 வாக்கில் முற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் சுவா.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.