SELANGOR

புயலால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு நேரில் சென்று மந்திரி பெசார் ஆறுதல்

11 ஜூலை 2019, 9:44 AM
புயலால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு நேரில் சென்று மந்திரி பெசார் ஆறுதல்

கோம்பாக், ஜூலை 11:

சுங்கை துவா சட்டமன்ற தொகுதி மண்டபத்தில் அடைக்கலம் புகுந்துள்ள புயலால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.  கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வீசிய புயலால் 125 குடும்பங்கள் பாதிப்புற்றன என்று அமிருடின் தெரிவித்தார்.

மரங்கள் விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. பாதிப்புற்ற இரு குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்றார் அவர்.

“உடனடி உதவியாக தற்போது 500 வெள்ளி வழங்கியுள்ளோம். சேதங்களை மதிப்பீடு செய்ய குறைந்தது ஒரு வாரமாகும். அதற்குப் பின்னர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.