SELANGOR

மந்திரி பெசாரின் சந்தை வருகை சமூக ஊடக பயனர்களைக் கவர்ந்தது

8 ஜூலை 2019, 4:32 AM
மந்திரி பெசாரின் சந்தை வருகை  சமூக ஊடக பயனர்களைக் கவர்ந்தது

ஷா ஆலாம், ஜூலை 8-

மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஸ்ரீ கெம்பாங்கான் சந்தைக்கு வருகை புரிந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இவை அதிகமானோரைக் கவர்ந்தன.

தனது மனைவிக்குத் துணையாக சந்தையில் காய்கறிகள் மற்றும் இறைச்சி வாங்குவதற்குத் தான் சென்றதாக தனது முகநூலில் அமிருடின் குறிப்பிட்டார்.

"அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பயனீட்டாளர்களிடமும் நான் அளவளாவினேன்" என்று அவர் மேலும் விவரித்தார். இதனிடையே, மீன், கோழி மற்றும் இறைச்சி விலை குறித்து இவரை முகநூலில் பின் தொடரும் சிலர் இவரிடம் வினவினர்.

"ஞாயிற்றுக்கிழமை மக்களைச் சந்தித்துள்ளீர்கள். மீன், கோழி மற்றும் இறைச்சி விலை எப்படி? " என்று முகமது அஸ்வான் வாஹி வினவினார்.

மக்களின் குறைகளைக் கேட்ட அமிருடினை அப்துல் கமால் அப்துல் கரிம் பாராட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.