SELANGOR

டிங்கி ஒழிப்பில் ஒத்துழைப்பீர்! -எம்பிபிஜே

26 ஜூன் 2019, 11:11 PM
டிங்கி ஒழிப்பில் ஒத்துழைப்பீர்! -எம்பிபிஜே

பெட்டாலிங் ஜெய, ஜூலை 27-

டிங்கி காய்ச்சல் அதிகளவில் பரவுவதைத் தடுக்க அனைத்து தரப்பும் அவசியம் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்ட போதிலும், டிங்கி மீதான மக்களின் விழிப்புணர்வு அதிகளவில் இல்லை என்பதோடு இந்த விவகாரத்திற்கு மக்கள் அளிக்கும் முக்கியத்துவம் திருப்திகரமாக இல்லை என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் தெரிவித்தார்.

ஏடிஸ் கொசுக்கள் வளரக் கூடிய இடங்களை அவ்வப்போது சோதனையிட ஒரு பத்து நிமிடத்தைச் செலவிடும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஊராட்சி மன்றம் அல்லது அரசாங்கத்தை மட்டும் சார்ந்திராமல் அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.