SELANGOR

பகாங்கை வீழ்த்தி மூன்றாவது நிலைக்கு முன்னேறியது சிலாங்கூர்

26 ஜூன் 2019, 5:28 AM
பகாங்கை வீழ்த்தி மூன்றாவது நிலைக்கு முன்னேறியது சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூன் 26:

பகாங்கை 5-2 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்திய சிலாங்கூர் மலேசிய சூப்பர் லீக் பட்டியலில் பேராக் மற்றும் கெடாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்றாவது இடத்தைப் பிடித்தது.

28 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் சிலாங்கூர் இடம்பெற்றுள்ள வேளையில் பேரா மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் 27, 26 புள்ளிகள் பெற்று முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது நிலையில் உள்ளன.

இதனிடையே, இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பகாங் சிலாங்கூரைக் காட்டிலும் 2 புள்ளிகள் அதிகம் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பகாங்கிற்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூரின் இறக்குமதி ஆட்டக்காரரான இஃபெடோ ஒமோசுயு ஆட்டத்தின் 36,43,86 ஆவது நிமிடங்களில் அடுக்கடுக்காக அடித்த மூன்று கோல்களைப் புகுத்தி சிலாங்கூரை வெற்றிப் படிகளில் முன்னேறச் செய்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.