SELANGOR

மந்திரி பெசார் பதவியேற்று ஓராண்டு நிறைவு: சிலாங்கூரை வளப்படுத்துவேன் - அமிரூடின்

20 ஜூன் 2019, 4:12 AM
மந்திரி பெசார் பதவியேற்று ஓராண்டு நிறைவு: சிலாங்கூரை வளப்படுத்துவேன் - அமிரூடின்

ஷா ஆலம், ஜூன் 20:

மக்கள் நலன் சார்ந்த திட்டம் வழியாக சிலாங்கூரை அமைதி மற்றும் செழுமையான சூழலில் தொடர்ந்து பீடு நடைபோடச் செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நோக்கம் நிறைவேற, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் ஒத்துழைப்போடு மாநிலத் தலைவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் அவசியம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூரின் 16ஆவது மந்திரி பெசாராக நான் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது” என்றார் அவர்

அனைவரும் ஒன்றிணைந்து வளமாக வாழ்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவோர் குறிப்பாக பொது மக்களை தாம் பெரிதும் வரவேற்பதாக அமிருடின் கூறினார்.

இதற்கு முன்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மத்திய பொருளாதார விவகார அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமிரூடின் ஷாரி சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.