SELANGOR

அசிங்கமான அரசியலில் ஈடுபட வேண்டாம் - அஸ்மின்

13 ஜூன் 2019, 9:05 AM
அசிங்கமான அரசியலில் ஈடுபட வேண்டாம் - அஸ்மின்
அசிங்கமான அரசியலில் ஈடுபட வேண்டாம் - அஸ்மின்

ஷா ஆலம், ஜூன் 13:

தற்போதைய அரசாங்கம் கொள்கை மற்றும் பண்புகள் கொண்ட அரசியல் சித்தாந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொடூரமான மற்றும் அசிங்கமான அரசியல் நடத்த வேண்டாம் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.

பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியது போல பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கை, மக்களின் வாழ்க்கை செலவீனங்களை குறைக்க வழிகள் மற்றும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எல்லா தரப்பினரும் பொறுப்போடு நடந்துக் கொண்டு ஒரு நிலையான அரசாங்கம் செயல்பட பாடுபட வேண்டும் என்று உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் (பிகேஎன்எஸ்) நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார். அவரோடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மாண்புமிகு அமிரூடின் ஷாரி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஹீ லோய் சான், எங் ஸீ ஹான் மற்றும் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் ஹில்மான் ஹிடாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.