SELANGOR

13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அபராதங்களுக்கு சிறப்பு கழிவு -எம்பிபிஜே அறிவிப்பு

10 ஜூன் 2019, 6:29 AM

ஷா ஆலம், ஜூன் 10-

போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு ஜூன் முதல் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) சிறப்புக் கழிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 13ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு இந்த சிறப்பு கழிவு வழங்கப்படுவதாக எம்பிபிஜே அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

ஆயினும், இந்தச் சிறப்புத் திட்டத்தில் நீதிமன்ற குற்றங்கள் உட்படுத்தப்படமாட்டா என்று எம்பிபிஜே கூறியது.

நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருக்கும் அபராதங்களை சிறப்பு கழிவு கட்டணத்தில் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நடவடிக்கை ஏற்படுத்தும் என்று அவ்வறிக்கை மேலும் தெரிவித்தது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.