SELANGOR

எம்பிபிஜே வரிச்சலுகை திட்டம் அமல்

30 மே 2019, 3:28 AM
எம்பிபிஜே வரிச்சலுகை திட்டம் அமல்

பெட்டாலிங் ஜெயா, மே 30-

சுற்றுச் சூழலுக்கு நட்புறவான வகையில் கரியமில வாயுவை குறைந்தளவு பயனீடு செய்யும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் திட்டம் கடந்த மே 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் 2011ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி எம்பிபிஜே அங்கீகரித்தது என்று டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பக்கார் கூறினார்.

ஆசியாவில் இது போன்ற திட்டத்தை அமல்படுத்தும் முதல் ஊராட்சி மன்றமாக எம்பிபிஜே திகழ்கிறது என்றார் அவர்.

“இதன் தொடர்ச்சியாக, 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இங்கிலாந்தின் பசுமை அமைப்பான ‘தெ கிரீன் ஆர்கனைசேஷன்’ இத்திட்டத்திற்கு ‘கிரீன் ஆப்பிள்” விருதை வழங்கியது” என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.