SELANGOR

குடிநீர் கட்டண உயர்வைத் தவிர்க்க மாநில அரசு முயற்சி

17 மே 2019, 4:51 AM
குடிநீர் கட்டண உயர்வைத் தவிர்க்க மாநில அரசு முயற்சி

ஷா ஆலம், மே 17-

குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தவிர்க்க மாநில அரசு பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமது தரப்பு ஆராய்ந்து வருவதாகவும் அவற்றின் முடிவு குறித்து ஜூலை மாத இறுதியில் அறிவிக்கக்கூடும் என்றும் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

ஆயினும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் 2ஆவது லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் கட்டண அதிகரிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“பல்வேறு வழிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எனினும் கட்டணம் அதிகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டாலும் புதிய கட்டண விகிதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு முயன்று வருகிறோம்” என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.