SELANGOR

ஷா ஆலமில் 26 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை

16 மே 2019, 3:21 AM
ஷா ஆலமில் 26 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை

ஷா ஆலம், மே 16-

ஷா ஆலம் சுற்றுப் புறத்தைச் சேர்ந்த 26 பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் 2 மணி தொடங்கி குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுங்கை சிலாங்கூர் மூன்றாம் கட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முக்கிய குழாய் ஒன்று பழுதடைந்துள்ளதால் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தாமான் புத்ரா மாஸ், புக்கிட் கூடா, பத்து தீகா லாமா செக்‌ஷன் 2 தொடங்கி செக்‌ஷன் 25 ஆகிய பகுதிகள் உட்பட பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது என்றார் அவர்.

எனவே, பயனீட்டாளர்கள் போதுமான தண்ணீரை சேமிக்கப்படும்படியும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கையை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.