SELANGOR

கோல சிலாங்கூர் மாவட்ட அலுவலகம் வெ. 70 மில்லியன் நில வரி வசூல்

15 மே 2019, 12:16 AM
கோல சிலாங்கூர் மாவட்ட அலுவலகம் வெ. 70 மில்லியன் நில வரி வசூல்

கோல சிலாங்கூர், மே 16-

மாநில அரசாங்கத்தின் இலக்கை கிட்டத்தட்ட எட்டும் வகையில் கோல சிலாங்கூர் மாவட்ட அலுவலகம் 68.9 லட்சம் வெள்ளி நில வரியை வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி 98.4 விழுக்காட்டு வரி வசூலிக்கப்பட்டிருப்பதாக கோல சிலாங்கூர் மாவட்ட அலுவலக அதிகாரி முகமது ஃபைசால் அப்துல் ராய் கூறினார்.

இந்த மாவட்டத்தில் 70 மில்லியன் வெள்ளி வரியை வசூல் செய்ய வேண்டும் என்று மாநில அரசாங்கம் இதற்கு முன்பு இலக்கு நிர்ணயித்ததாக அவர் சொன்னார்.

அதே சமயம், செங்கல் உரிமைக்கான வரி வசூலும் பெருமையளிப்பதாகக் குறிப்பிட்ட முகமது ஃபைசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் இதன் வசூல் 38 லட்சம் வெள்ளியைத் தாண்டியதாகச் சொன்னார்.

இங்கு கம்போங் சுங்கை செம்பிலான் அன் நாய்ம் பள்ளிவாசலில் மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா சிறப்பு வருகை புரிந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டம் தொடர்ந்து மேம்பாடு கண்டு வரும் நிலையில் இதன் சுற்றுப் புற தூய்மையும் தொடர்ந்து பேணிக் காக்கப்படும் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.