SELANGOR

கிள்ளானில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பிய நிலை இன்னும் 99 விழுக்காடாகவே உள்ளது

13 மே 2019, 2:20 AM
கிள்ளானில் குடிநீர் விநியோகம்  வழக்க நிலைக்குத் திரும்பிய நிலை இன்னும் 99 விழுக்காடாகவே உள்ளது

ஷா ஆலம், மே 13-

கிள்ளான் பகுதியில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது இன்னும் 99 விழுக்காடு நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. விநியோகிப்பு முறையில் கண்காணிப்பு மற்றும் நீர் அழுத்த வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் குடிநீர் நிர்வாக மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவுஃப் அகமது கூறினார்.

பண்டார் புத்ரா 2 மற்றும் தாமான் செந்தோசா ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்னும் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகள் லீப்பாட் காஜாங் குளத்தில் இருந்து நீரைப் பெறுகின்றன.

இந்தக் குளத்தில் நீரின் அளவு இன்னும் குறைந்த அளவிலேயே இருப்பதே குறிப்பிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டதற்கான காரணம் என்று கூறப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.