SELANGOR

நிறுவனங்கள் வழங்கிய வெ.13.1 மில்லியன் ஜக்காட் நிதி சிலாங்கூர் சுல்தான் பெற்றுக் கொண்டார்

8 மே 2019, 1:19 PM
நிறுவனங்கள் வழங்கிய வெ.13.1 மில்லியன் ஜக்காட் நிதி சிலாங்கூர் சுல்தான் பெற்றுக் கொண்டார்

ஷா ஆலம், மே 9:

சிலாங்கூர் ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மாநிலத்தின் வர்த்தக நிறுவனங்கள் சிலாங்கூர் ஜாகாட் வாரியத்திடம் வழங்கிய 13,1 மில்லியன் வெள்ளியைப் பெற்றுக் கொண்டார்.

டிஆர்பி ஹைகோம் குழுமத்தைப் பிரதிநிதித்து அதன் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ சயிட் ஃபைசால் அல்பார் 4.64 மில்லியன் வெள்ளியை வழங்கிய வேளையில், சிலாங்கூர் மேம்பாட்டு கழகம் அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமதுஅஸிஸி முகமது ஜயின் மூலம் 2.86 மில்லியன் வெள்ளியை வழங்கியது.

அதே வேளையில், வேர்ல்ட்ஜ்வைட் ஹோல்டிங்ஸ் நிறுவன குழுமத்தின் சார்பில் அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுகா நோராஸ்லினா 2.75 மில்லியன் வெள்ளியை வழங்கினார். அவரைத் தொடர்ந்து பேங்க் இஸ்லாம் மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது முவாஸாம் முகமது 1.21 மில்லியன் வெள்ளியை அந்நிறுவனத்தின் ஜக்காட் நிதியாக வழங்கினார்.

மேலும் இரண்டு நிறுவனங்களான யூஎம்டபள்யூ ஹோல்டிங்ஸ் 1.16 மில்லியன் வெள்ளியையும் சிலாங்கூர் மாநில முதலீட்டு நிறுவனம் 500,000 வெள்ளியையும் வழங்கின.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.