SELANGOR

செகிஞ்சான் சமூக சேவை மையம் நோன்பு மாத கஞ்சியை வழங்கும்

2 மே 2019, 2:50 AM
செகிஞ்சான் சமூக சேவை மையம் நோன்பு மாத கஞ்சியை வழங்கும்

ஷா ஆலாம், மே 2-

செகிஞ்சான் சட்டமன்ற தொகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் முந்தைய ஆண்டுகளைப் போலவே நோன்பு மாதம் முழுமையும் கஞ்சி விநியோகிக்கும் சமூக சேவை மையத்தின் பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

செகிஞ்சான் சமூக சேவை மையத்தின் முன்புறம், புதன்கிழமை தோறும் 400 முதல் 500 பாக்கெட் மாட்டிறைச்சி கஞ்சி விநியோகிக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம் கூறினார்.

“அதிகாலை தொடங்கி இரவு வரை நோன்பு நோக்கும் இஸ்லாமியர்களுக்கு புதன்கிழமை தோறும் மாட்டிறைச்சி கஞ்சி விநியோகிப்போம்” என்றார் அவர்.

தாம் ஒரு முஸ்லிம் இல்லை என்றாலும், ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்க விருப்பதாக இங் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.