SELANGOR

செக்‌ஷன் 17 பேருந்து முனையம் செயல்படத் தொடங்கியது

1 மே 2019, 8:45 AM
செக்‌ஷன் 17 பேருந்து முனையம் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், மே 1:

இங்குள்ள செக்‌ஷன் 17 பஸ் முனையம் இன்று பொது மக்களுக்கு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவு பேருந்துகளைப் பயன்படுத்தும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று பொது விடுமுறை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இங்கு வருகை புரிந்தனர்.

இந்த பேருந்து முனையம் செயல்படத் தொடங்கி சில காலம் ஆகிய போதிலும் இப்பொழுது முழுமையாகத் திறக்கப்பட்டது மன நிறைவை அளிப்பதாக இங்கு வருகையளித்த மா ரஷிடா என்பவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் பேராக்கில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல இந்த பேருந்து நிலையத்திற்கு தான் வருவதாக அவர் சொன்னார்.

செக்‌ஷன் 13 மற்றும் 17 ஆகிய பகுதிகளில் முன்பிருந்த தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் இந்த முனையத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதாக அவர் கருத்துரைத்தார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.