SELANGOR

விவேக பிஜே திடக் கழிவு நிறுவன கண்காட்சி: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

23 ஏப்ரல் 2019, 2:19 AM
விவேக பிஜே திடக் கழிவு நிறுவன கண்காட்சி: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ஷா ஆலம், ஏப்.23:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் ஏற்பாடு செய்த விவேக பிஜே திடக் கழிவு நிறுவனத்தின் கண்காட்சிக்கு பொது மக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி அனுசரிக்கப்படும் பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மாநகராட்சி மன்றத்தின் ஊடக தொடர்பு செயலகம் தெரிவித்தது.

இந்நிகழ்ச்சியின் போது காய்கறிகளோடு செடிகள், விதைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்ட வேளையில் ஹைடுரோபோனிக் முறையில் காய்கறிகளை பயிரிடுவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது என்று அந்த அறிக்கை கூறியது.

காலை மாலை என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதலில் வருகை புரிந்த 300 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.