SELANGOR

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்

10 ஏப்ரல் 2019, 12:32 AM
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்

 

ஷா ஆலம், ஏப்.9-

முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி துபாய் சென்றடைந்தார்.

நேரடி அந்நிய முதலீட்டை பெறுவதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த தளம் என்று தனது முகநூல் வழி அமிருடின் தெரிவித்தார்.

இந்த மாநாடு ஐக்கிய அரபு சிற்றரசின் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில் அதன் பிரதமர் மதிப்பிற்குரிய ஷேக் முகமது ரஷிட் அல் மாக்தோவும் தலைமையில் நடைபெறுகிறது என்றார் அவர்.

இம்மாநாட்டில் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், கொள்கை இயற்றுபவர்கள், வர்த்தகர்கள், வட்டார மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்கள் ஆகியோர் உட்பட தொழில்முனைவர்கள், கல்வியாளர்களும் பங்கேற்பதாக அமிருடின் விளக்கமளித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.