ஷா ஆலம், ஏப்.4-
ஸ்ரீகெம்பாங்கான், தாமான் செர்டாங் ஜெயாவில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்னைக்கு உடனடி மற்றும் நீண்ட கால தீர்வு காண சுபாங் ஜெயா நகராண்மைக் கழகங்களிடத்தில் செயல்திட்டங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிப்புற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள எம்பி எஸ்ஜே அதன் மின்னல் படையை அனுப்பி தேவையான உதவிகளை அளித்தததாக அதன் நிறுவனம் மற்றும் வியூக நிர்வாகப் பிரிவு துணை இயக்குனர் அஸ்ஃபாரிஸால் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
பாதிப்புற்றோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு வெள்ளத்தால் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களும் அகற்றப்பட்டன என்றார் அவர்.
மேலும், பள்ளிக்கூடம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கால்வாய்களை அடைத்துள்ள மரங்கள் மற்றும் அவற்றின் கிளைகளையும் அகற்றும் பணியில் எங்கள் தரப்பினர் ஈடுபட்டனர் என்று அஸ்ஃபாரிஸால் கூறினார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிப்புற்ற பகுதியை பார்வையிட்ட தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் டியோ சிங், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சில வழிகளைப் பரிந்துரை செய்தார்.








