SELANGOR

மோரிப் கடற்கரை விழாவிற்கு புத்துயிர்

2 ஏப்ரல் 2019, 2:23 AM
மோரிப் கடற்கரை விழாவிற்கு புத்துயிர்

ஷா ஆலம், ஏப்.2-

சுற்றுப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற மோரிப் கடற்கரை மீண்டும் உயிர்ப்பிக்க கோலலங்காட் மாவட்டம் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டை கோலலங்காட்டிற்கு வருகை புரியும் ஆண்டாக வெற்றி பெறச் செய்வதற்கு இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும் என்று அதன் தலைவர் முகமது ஜெயின் அப்துல் ஹமிட் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவிற்கு இங்கு வருகை புரிவோர் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அக்கொண்டாட்டத்திற்குப் பின்னர் மதிப்பிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த விழா ஒரு வெற்றிகரமான கொண்டாட்டம் என்று கண்டறியப்பட்டால், இது வருடாந்திர விழாவாக அனுசரிக்கப்படும் என்றும் இந்த விழாவை ஏற்பாடு செய்ய அதிக காலம் தேவையில்லை என்றும் ஜெயின் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.