SELANGOR

75,000க்கும் அதிகமானோர் வெ.40 மின்சார கழிவு பெற்றனர்

27 மார்ச் 2019, 7:19 AM
75,000க்கும் அதிகமானோர் வெ.40 மின்சார கழிவு பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 27-

இ-காசே திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் மற்றும் வறிய நிலையில் வாழும் மக்கள் உட்பட 75,618 குடும்பத் தலைவர்கள் கடந்த மார்ச் 11ஆம் தொடங்கிய மின்சாரக் கட்டண உதவித் திட்டத்தின் கீழ் 40 வெள்ளி கழிவு பெற்றனர்.

இந்தத் திட்டத்திற்கு தகுதி பெற்ற மொத்தம் 213,965 குடும்பத் தலைவர்களில் இதுவரையில் 36,1 விழுக்காட்டினர் கழிவுச் சலுகையைப் பெற்றுள்ளனர் என்று எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் துறை துணை அமைச்சர் இஸ்னாரைசா முனிரா கூறினார்.

இந்த 36.1 விழுக்காட்டினர் மட்டுமே மின்சார கணக்குடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகவல்களைக் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு தகுதி பெற்ற பலர் மின்சார நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கவில்லை என்று அவர் சொன்னார்.

முன்பு இ-காசே திட்டத்தில் இடம்பெற்றிராத பல குடும்பங்களும் 20 வெள்ளி கட்டணக் கழிவுக்குத் தகுதி பெற்றிருந்த வேளையில், தற்போதுள்ள மின்சார உதவித் தொகையின் கீழ் 40 வெள்ளி கழிவு பெறத் தகுதிபெற்றவர்களை அடையாளம் காணும் முறை குறித்து லானாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் இயெங் கேட்ட கேள்விக்கு துணை அமைச்சர் மேற்கண்ட விபரங்களை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.