SELANGOR

செத்தியா ஆலமில் புதிய கிளினிக்

22 மார்ச் 2019, 5:09 AM
செத்தியா ஆலமில் புதிய கிளினிக்

ஷா ஆலம், மார்ச் 21-

செத்தியா ஆலம் பகுதியில் குடியிருப்போருக்கு வழங்கப்படும் சுகாதாரச் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிதாக ஒரு கிளினிக்கை இங்கு நிர்மாணிப்பதற்கு பொருத்தமான ஓர் இடத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

ஆயினும், அந்த நிலத்தின் உரிமை இன்னும் பெறப்படவில்லை என்று சுகாதாரம், சமூகநலன், குடும்பம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

“எனவே, அந்த நிலத்தை அரசுடைமையாக்கும் விண்ணப்பத்தை மாநில சுகாதா இலாகா மேற்கொள்ளும்” என்று அவர் சொன்னார்.

அதுவரையில், செத்தியா ஆலம் குடியிருப்பாளர்கள் கிள்ளான் மேரு கிளினிக், ஷா ஆலம் செக்‌ஷன் 7 மற்றும் புக்கிட் கூடா ஆகிய பகுதிகளில் உள்ள கிளினிக்குகளில் மருத்துவச் சேவையை பெற்று வரலாம் என்று மாநில சட்டமன்றத்தில் டாக்டர் சித்தி தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.