SELANGOR

பள்ளிக்கு இலவச பேருந்து சேவை வழங்க, சிலாங்கூர் தயாராகவில்லை

22 மார்ச் 2019, 5:01 AM
பள்ளிக்கு இலவச பேருந்து சேவை வழங்க, சிலாங்கூர் தயாராகவில்லை

ஷா ஆலம், மார்ச் 22-

மாணவர்களுக்கான சிறப்பு விவேகத் திட்டத்தில் பேருந்து சேவையை வழங்க சிலாங்கூர் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று , பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

மாநிலத்தின் நிதிநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தத் திட்டம் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்று அவர் சொன்னார்.

மேலும், தோட்டத் தொழிலாளர் செயற்குழுவின் கீழ் பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இது தவிர்த்து, பேருந்து ஓட்டுநர்களின் வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் கவனத்தில் கொள்வது அவசியம் என்று இங் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.