SELANGOR

விவேக சிலாங்கூர்: அக்டோபரில் 4 புதிய திட்டங்கள் அறிமுகம்

17 மார்ச் 2019, 10:41 AM
விவேக சிலாங்கூர்: அக்டோபரில் 4 புதிய திட்டங்கள் அறிமுகம்

சபாக் பெர்ணம், மார்ச் 18-

விவேக சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் 4 புதிய திட்டங்கள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 4 புதிய திட்டங்களை அம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆய்வுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபாஹ்மி ஙா கூறினார்.

இதில் விவேக மறுபயனீடு, விவேக தெரு விளக்கு, பெரிய தரவு ஆய்வு மற்றும் சிலாங்கூர் அகண்ட அலை வரிசைப் பகுதி (SWAN) ஆகிய திட்டங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

விவேக மறுபயனீடு திட்டம் கேடி இபி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை வழி குப்பைகள் நேரடியாக அழிக்கப்பட மாட்டா என்று ஃபாஹ்மி விளக்கமளித்தார்.

விலைமதிப்புள்ள பொருட்களையும் குப்பைகளாக அழிக்கப்படுகின்றன என்ற மக்களின் கணிப்பை நாங்கள் மாற்ற விரும்புகிறோம் என்று சிலாங்கூர் கினியிடம் ஃபாஹ்மி தெரிவித்தார்.

இது தவிர்த்து, ஸ்வான் என்ற அகண்ட அலைவரிசைத் திட்டம் என்பது மாநில செயலகத்துடன் அனைத்து அரசு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில அரசின் கிளை நிறுவனங்கள் அனைத்தையும் அதிவேகமாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் திட்டமாகும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.