SELANGOR

எம்பிஎஸ்ஜே “ஸ்பீக்கர் கோர்னர்” திட்டம் பணியாளர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்

9 மார்ச் 2019, 3:00 AM
எம்பிஎஸ்ஜே “ஸ்பீக்கர் கோர்னர்” திட்டம் பணியாளர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்

சுபாங் ஜெயா, மார்ச் 9-

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மெற்கொள்ளும் “ஸ்பீக்கர் கோர்னர்” எனும் பேச்சாளர்களை உருவாக்கும் திட்டமானது அதன் பணியாளர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

எம்பி எஸ்ஜே பணியாளர்கள் மத்தியில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடப்பு சூழ்நிலை அல்லது பொருத்தமான தலைப்பில் பொது உரை நிகழ்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று மன்றத்தின் நிறுவனம் மற்றும் வியூக நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் அஸ்ஃபாரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல் புதன்கிழமை நடைபெறும் என்றும் இது இலாகா வாரியாக வரிசைகரமாக நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

பணியாளர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்க இந்த திட்டம் உறுதுணையாகவும் ஒரு புது அனுபவத்தையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.