SELANGOR

செமினி இடைத்தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது

1 மார்ச் 2019, 2:55 AM
செமினி இடைத்தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது

செமினி, மார்ச் 1-

துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் செமினி இடைத்தேர்தலில் இளைஞர் களமிறக்கப்பட்டிருப்பது அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளதாக அமானா கட்சி தலைவர் முகமது சாபு கூறினார்.

பாலஸ்தீன விவகாரத்தில் துணிச்சலாக குரல் கொடுக்கும் ஹீரோவாக மகாதீர் கருதப்படுகிறார் என்றும் அந்நாட்டில் அதிகளவில் காணப்படும் புகைப்படமாக மகாதீரின் புகைப்படங்கள் உள்ளன என்றும் சாபு தெரிவித்தார்.

“ஆசியாவின் வேங்கை என முன்பொரு காலம் புகழப்பட்ட தலைவரான அவர் இன்று பாலீஸ்தீனத்தின் வீரராக வர்ணிக்கப்படுகிறார். நிலைமை இவ்வாறு இருக்கையில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட செமினி வேட்பாளர் தோல்வியடைவது சாத்தியமில்லை” என்றார் அவர்.

எனவே, இத்தொகுதியில் உள்ள பூர்வக் குடியினர் உட்பட அனைத்து இனத்தவர்களும் பக்காத்தானுக்கு வாக்களிப்பர் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.