SELANGOR

கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக மேம்பாடு காணும்!!!

28 பிப்ரவரி 2019, 8:36 AM
கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக மேம்பாடு காணும்!!!

கோல லங்காட், மார்ச் 1-

கோல லங்காட் மாவட்ட மன்றம் இவ்வாண்டு நகராண்மைக் கழகமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான ஆவணங்களை தமது மன்றத்தின் பொருளாதார திட்டமிடல் பிரிவு தயார் செய்து வருவதாகவும் அந்நடவடிக்கை நிறைவடைந்ததும் அவை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சின் அங்கீகாரத்திற்காக ஒப்படைக்கப்படும் என்று மன்றத்தின் தலைவர் முகமது ஜெயின் ஏ ஹமிட் கூறினார்.

முன்னதாக, மன்றத்தின் அந்தஸ்தை உயர்த்தும் நடவடிக்கை விரைவாக நடைபெறும் வகையில் அது குறித்து மாநில அரசாங்கத்தின் பொதுக் கூட்ட மன்றத்துடன் விவாதிக்கப்படும் என்றார் அவர்.

இந்த நடைமுறைகள் யாவும் நிறைவு பெற்றதும், மன்றத்தின் அந்தஸ்து உயர்வு பெறுவது குறித்து பொது மக்களிடம் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.