SELANGOR

பெரிய முதலீடுகளைக் கவர்ந்த சிலாங்கூர் அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் பாராட்டு

22 பிப்ரவரி 2019, 7:19 AM
பெரிய முதலீடுகளைக் கவர்ந்த சிலாங்கூர் அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் பாராட்டு

ஷா ஆலம், பிப்.23:

அதிக எண்ணிக்கையிலான முதலீடுகள் வழி மிகப் பெரிய வர்த்தகங்களைப் பதிவு செய்த சிலாங்கூர் அரசாங்கத்தை அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை (மிட்டி) அமைச்சர் டத்தோ டேரல் லெய்க்கிங் பாராட்டினார்.

உயரிய மதிப்பிலான அந்நிய முதலீடுகளை அதிகளவில் கவர்ந்ததோடு உள்நாட்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

இந்த வெற்றியை அடைய சிலாங்கூர் மேற்கொண்ட வியூகங்களையும் அணுகுமுறைகளையும் இதர மாநிலங்களும் பின்பற்றி சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் டேரல் கோடி காட்டினார்.

ஒருவரின் வெற்றிக்கான வியூகத்தை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதே மலேசியாவின் தனிச் சிறப்பாகும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.