SELANGOR

செமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்!

16 பிப்ரவரி 2019, 12:41 AM
செமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்!

காஜாங், பிப்.16:

செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் காஜாங் நகராண்மைக் கழகத்தின் டேவான்ஸ்ரீ செம்பாகாவில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் மொத்தம் 13 நியமனப் பாரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றுள் பாக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி மற்றும் மலேசிய சோஷியலிஸ் கட்சி வேட்பாளர்களுக்கான 3 பாரங்களும் அடங்கும்.

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட நான்கு வேட்பாளர் நியமனப் பாரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் முகமது அய்மான் ஜைனாலி ( வயது 30) எனும் இளம் பொறியியலாளரை பக்காத்தான் ஹராப்பான் களம் இறக்கும் வேளையில், ஜக்காரியா ஹனாஃபி (வயது 58) எனும் உள்ளூர் தலைவரை தேசிய முன்னணி களம் இறக்குகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.