SELANGOR

தஞ்சோங் காராங்கில் புயல் காற்று 165 வீடுகள் சேதம்!

13 பிப்ரவரி 2019, 4:14 AM
தஞ்சோங் காராங்கில் புயல் காற்று 165 வீடுகள் சேதம்!

தஞ்சோங் காராங், பிப்.13:

தஞ்சோங் காராங்கில் வீசிய புயல்காற்றில் 165 வீடுகள் சேதமாயின. கடந்த 20 ஆண்டுகளில் சிலாங்கூரில் வீசிய மிக மோசமான புயல் காற்று இது என வருணிக்கப்பட்டுள்ளது.

இப்பேரிடரில் பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இதில் கம்போங் சாவா செம்பாடான் மற்றும் கம்போங் திராம் ஜெயா ஆகிய இரு கிராமங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ எட்டியுள்ளதால் இம்மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான புயல்காற்று என இதைக் கூறலாம்” என்று அமிருடின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும். நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும் என்றும் குடியிருப்பாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.