SELANGOR

செமினியை கைப்பற்ற மீண்டும் துடிப்புடன் செயல்படுவீர்!

13 பிப்ரவரி 2019, 1:55 AM
செமினியை கைப்பற்ற மீண்டும் துடிப்புடன் செயல்படுவீர்!

செமினி, பிப்.13:

ஆளும் கூட்டணி என்று அழைக்கப்படுவதைக் காரணமாகக் கூறி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுப்பினர்கள் மிகவும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று அதன் மகளிர் அணி தலைவர் சுரைடா கமாருடின் நினைவுறுத்தினார்.

மாறாக, எதிர்கட்சியாக செயல்பட்ட போது இருந்த சுறுசுறுப்பான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

“நாம் இப்போது அரசாங்கம் என்பதால், வெற்றிக் களிப்பில் ஓய்வெடுக்கலாம் என்று பொருளல்ல” என்று சுரைடா வலியுறுத்தினார்.

“நாம் அடிப்படை நிலைக்குத் திரும்பி செமினி சட்டமன்றத் தொகுதியை கைப்பற்றுவதற்கு ஏதுவாக மீண்டும் ஓர் எதிர்கட்சி போல் செயல்பட வேண்டும்” என்று அக்கூட்டனியின் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.