SELANGOR

கோம்பாக்கில் டிங்கி காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது!

30 ஜனவரி 2019, 8:23 AM
கோம்பாக்கில் டிங்கி காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது!

ஷா ஆலம், ஜன.30:

கோம்பாக் வட்டாரத்தில் பரவி வரும் டிங்கி காய்ச்சல், இம்மாதத்தின் நான்காவது வாரம் வரை கட்டுப்பாட்டில் இருப்பதாக செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் அமிர் ஃஅஸ்லீ தெரிவித்தார்.

இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 197 பேருக்கு இக்காய்ச்சல் தொற்றியிருந்த வேளையில் இவ்வாரம் 145 பேருக்கு மட்டுமே இந்த காய்ச்சல் பரவியுள்ளது என்றார் அவர்.

“சிலாங்கூரில் டிங்கி காய்ச்சல் அதிகளவு பரவியிருப்பதை நாம் அறிவோம். ஆயினும், கோம்பாக் வட்டாரத்தில் இது கட்டுப்பாட்டில் உள்ளதோடு இதுவரை மரணச் சம்பவம் ஏதும் நிகழவில்லை.”

எனினும், இந்த காய்ச்சல் பரவலைத் தடுக்க எம்பி எஸ் மற்றும் கோம்பாக் வட்டார சுகாதார அலுவலகமும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.