SELANGOR

பூலாவ் இண்டாவில் இகியா விநியோக மையம்!

30 ஜனவரி 2019, 2:15 AM
பூலாவ் இண்டாவில்  இகியா விநியோக மையம்!

பினாங்கு , ஜன.30:

900 மில்லியன் வெள்ளி முதலீட்டில் இகியா மலேசியாவின் விநியோக மையம் ஒன்று விரைவில் பூலாவ் இண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய அதன் கட்டுமானப் பணி 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்து அம்மையம் செயல்படத் தொடங்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

புவி ஈர்ப்பு ஆய்வின்படி, தென் கிழக்காசிய வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் இந்த “இகியா” விநியோக மையம் அமையவிருக்கும் பகுதி ஒரு சிறந்த வியூகமாகும் என்று தெரியவந்துள்ளது.

வெஸ்ட்போர்ட் மற்றும் நோர்த் போர்ட் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள பூலாவ் இண்டா இதற்கு தேர்வு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

சிறந்த, நட்புறவான வர்த்தகச் சூழல் நிறைந்த சிலாங்கூரில் உள்ள பூலாவ் இண்டாவைத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறந்த நடவடிக்கை என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.