SELANGOR

ஹிஜ்ரா கடனுதவியை வட்டி முதலைகளாக கருதாதீர்!

25 ஜனவரி 2019, 2:53 AM
ஹிஜ்ரா கடனுதவியை வட்டி முதலைகளாக கருதாதீர்!

ஷா ஆலம், ஜன.25:

சிலாங்கூர் ஹிஜ்ரா மைக்ரோ கடனுதவி திட்டத்தை அனுமதி பெற்ற ஆலோங் என்று கருதக்கூடாது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கடன் வழங்குவதும் வசூலிப்பதும் மட்டுமே ஹிஜ்ராவின் பொறுப்பாகாது. மாறாக, போட்டியாற்றல் மிக்க தொழில்முனைவர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்றார் அவர்.

கடன் வழங்கும் வட்டி முதலைகளோடு இந்தத் திட்டத்தை ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இது வர்த்தகர்களை மேம்படுத்தும் இலக்கை கொண்ட திட்டமாகும்.

சிலாங்கூரில் வர்த்தகர்களை மேம்படுத்த சிலாங்கூர் மைக்ரோ நிதி திட்டம் போன்ற சில திட்டங்கள் செயல்பட்டு வருவதையும் அவை முழுமையான திட்டங்களாக இருப்பதையும் குறிப்பிட்டதுடன் நம்மில் பலருக்கு அத்திட்டங்கள் குறித்து தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.