SELANGOR

4 ஆண்டுகளில் வெ.428,17 மில்லியன் ஹிஜ்ரா கடனுதவி!

25 ஜனவரி 2019, 2:28 AM
4 ஆண்டுகளில் வெ.428,17 மில்லியன் ஹிஜ்ரா கடனுதவி!

ஷா ஆலம், ஜன.25:

2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது முதல் இவ்வாண்டு ஜனவரி வரையில் ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்திற்கு தகுதி பெற்றவர்களுக்கு மொத்தம் 428,167,500 வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்த 44,734 தொழில்முனைவர்கள் செய்த 53,802 விண்ணப்பங்களுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த சில வர்த்தகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்ததே இந்தத் தொகை அதிகரித்ததற்கு காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார்.

சிலாங்கூரில் உள்ள தொழில்முனைவர்களை மேம்படுத்துவதற்காக ஹிஜ்ரா திட்டம் தோற்றுவிக்கப்பட்டு 4 ஆண்டுகளானலும் அது பல வர்த்தகர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது இந்த தொகை அதிகரிப்பு ஒரு சான்றாகும்.

இங்குள்ள ‘விஸ்மா கோப்பராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூரை’ அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் ஷாரி மேற்கண்ட விபரங்களை பகிர்ந்து கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.