SELANGOR

தைப்பூசத்தை முன்னிட்டு 2 முகப்பிடங்களை எம்பிஏஜே மூடுகிறது

18 ஜனவரி 2019, 1:47 AM
தைப்பூசத்தை முன்னிட்டு 2 முகப்பிடங்களை எம்பிஏஜே மூடுகிறது

ஷா ஆலம், ஜன.18:

தைப்பூசத்தை முன்னிட்டு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மெனாரா எம்பிஏஜே 4ஆவது மாடியில் உள்ள ஓரிட சேவை முகப்பையும் மெலாவாத்தி கிளையின் கட்டண முகப்பிடத்தையும் வரும் திங்கள்கிழமை மூடவிருக்கிறது.

இவ்விரு முகப்பிடங்களும் ஜனவரி 22 ஆம் தேதி காலை மணி 9 தொடங்கி மாலை மணி 5 வரை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அதன் தொடர்பு பிரிவு அதிகாரி நோர்ஹயாத்தி அகமட் கூறினார்.

விடுமுறை காலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இ-வங்கியல் (iCOMM) சேவையைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தலாம்.

எனவே, இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்பும் பொது மக்கள் 03-42857004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.